search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராதா மோகன்"

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் விமர்சனம். #KaatrinMozhiReview #Jyothika #Vidharth
    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விதார்த் - ஜோதிகா வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். விதார்த் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். குறைவான சம்பளம் என்றாலும் மனநிம்மதியுடன் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.

    ஜோதிகாவுக்கு இரு அக்காள்கள், 12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்ததால், ஜோதிகாவை இருவரும் மட்டம் தட்டி வருகிறார்கள். இதற்கிடையே தனது திறமையை நிரூபிக்க ஏதாவது மேடை கிடைக்காதா என்று எதிர்பார்த்து வருகிறார் ஜோதிகா. இந்த நிலையில் ஹலோ எப்.எம். நடத்தும் நிகழ்ச்சியில் பரிசு வெல்லும் ஜோதிகா, எப்.எம்.-ல் ஆர்.ஜே.,வாகும் முயற்சியில் இறங்குகிறார். குரல் தேர்வு முடிந்து எப்.எம்.-ல் வேலைக்கும் சேர்கிறார். ஜோதிகாவுக்கு இரவு நேர நிகழ்ச்சிகள் ஒதுக்கப்படுகிறது. இதனால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை.



    மனைவியுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்று விதார்த் வருத்தப்படுகிறார். இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. இது இவர்களது குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகளை உருவாக்குகிறது? எப்.எம்-க்கும் போன் செய்யும் பலரது பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஜோதிகா, தனது குடும்ப பிரச்சனையை எப்படி சமாளித்தார்? ஆர்.ஜே. வேலையில் தொடர்ந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ஜோதிகா தனது அழகான நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப் போடுகிறார். தனது தனித்துவமான முகபாவனை, பேச்சின் மூலம் படத்தின் காட்சிகளை நகர்த்துகிறார்.



    ஜோதிகாவுடன் வரும் காட்சிகளில் விதார்த் போட்டிபோட்டு நடித்திருக்கிறார். காட்சிக்கு ஏற்ப மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார். 

    லக்‌ஷ்மி மஞ்சு, மனோபாலா, இளங்கோ குமரவேல் என அனைத்து கதாபாத்திரங்களும் படத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை சிறப்பாக நடித்திருக்கிறார். சிம்பு, யோகி பாபு சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர்.



    சாதாரண திரைக்கதையில் சென்டிமெண்ட் காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்கு செல்வதும், அதனால் அவரது குடும்பத்தில் ஏற்படும் மனஸ்தாபங்களையும் அன்பு, காதல், காமெடி என அனைத்து கலந்த கலவையான தனது பாணியில் கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் சிறப்பாக செதுக்கி ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் கதையின் போக்குக்கு ஏற்ப விதார்த்தை காட்டிய இயக்குநர், தொடக்கம் முதல் இறுதிவரை ஜோதிகாவை ஒரே மாதிரியாக காட்டியிருக்கிறார். ஜோதிகாவின் உடை, அலங்காரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் முழுக்க வசதியான வீட்டுப் பெண்ணாகவே வலம் வருகிறார்.

    ஏ.எச்.காஷிப் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமையாக வந்திருக்கின்றன.

    மொத்தத்தில் `காற்றின் மொழி' இனிமை. #KaatrinMozhiReview #Jyothika #Vidharth

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் காற்றின் மொழி படத்தில் நடித்துள்ள ஜோதிகா மற்றும் படக்குழுவுக்கு நடிகை வித்யா பாலன் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #KaatrinMozhi #Jyothika #VidyaBalan
    ஜோதிகா நடிப்பில் நாளை ரிலீசாகி இருக்கும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கி உள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சிம்பு, யோகி பாபு நடித்துள்ளனர்.

    இந்தியில் வெளியான ‘தும்ஹரி சூளு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் வெளியாகி இருக்கிறது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்க, தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார். இந்த நிலையில், படத்தையும், படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வித்யா பாலன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    அந்த வீடியோவில் வித்யா பாலன் கூறியதாவது, “எனக்கு ரொம்பவே சந்தோ‌ஷமாக இருக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது. இந்தியில் ‘தும்ஹரி சூளு’ படத்தில் நான் பண்ண ரோல், தமிழில் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பண்ணியிருக்காங்க. ஜோதிகா, ராதாமோகன், தனஞ்ஜெயன் மற்றும் படத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆல் த பெஸ்ட். நான் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்களும் அதேபோல் காத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். #KaatrinMozhi #Jyothika #VidyaBalan

    ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் முன்னோட்டம். #KaatrinMozhi #Jyothika
    பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள படம் காற்றின் மொழி.

    ஜோதிகா ஆர்.ஜே.வாக நடித்திருக்கும் இந்த படத்தில் விதார்த், லக்ஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மோகன்ராமன், உமா, பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் சிம்பு, யோகி பாபு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

    இசை - ஏ.எச்.காஷிப், படத்தொகுப்பு - பிரவின்.கே.எல்., ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, கலை இயக்குனர் - கதிர், சண்டைப்பயிற்சி - நடனம் - விஜி சதிஷ், உடை வடிவமைப்பாளர் - பூர்ணிமா ராமசாமி, பாடலாசிரியர் - மதன் கார்க்கி, தயாரிப்பு - தனஞ்ஜெயன், தயாரிப்பு நிறுவனம் - பாப்டா மீடியா, கதை - சுரேஷ் திரிவேனி, வசனம் - பொன் பார்த்திபன், இயக்கம் - ராதாமோகன்.



    படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜோதிகா பேசியதாவது,

    ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது. ‘காற்றின் மொழி’ படம் கதாநாயகியை சுற்றிவரும் கதை. வேலைக்கு போகும் பெண்ணை பற்றிய கதை. பெண்மையை உயர்த்தி பிடிக்கிற இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.

    இந்த கதையில் பிடித்த அம்சமே ஒரு கணவன்-மனைவி இடையேயான உறவு தான். இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒருசில நடிகர்களுடன் தான் எந்த இடையூறும் இன்றி சவுகரியமாக நடிக்க முடியும். சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுடன் நான் அதை உணர்ந்திருக்கிறேன். இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக இருந்தது. என்றார். 

    படம் வருகிற நவம்பர் 16-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #KaatrinMozhi #Jyothika

    `காற்றின் மொழி' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சூர்யா, அஜித், மாதவனுடன் நடிக்கும் போது சவுகரியமாக இருக்க முடியும் என்று நடிகை ஜோதிகா கூறினார். #KaatrinMozhi #Jyothika
    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த்த நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜோதிகா பேசியதாவது,

    ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது. ‘காற்றின் மொழி’ படம் கதாநாயகியை சுற்றிவரும் கதை. வேலைக்கு போகும் பெண்ணை பற்றிய கதை. பெண்மையை உயர்த்தி பிடிக்கிற இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.

    இந்த கதையில் பிடித்த அம்சமே ஒரு கணவன்-மனைவி இடையேயான உறவு தான். என்னை பார்க்கிறவர்களெல்லாம் ‘குஷி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக நடிப்பேன்.

    ‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சி நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.



    இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

    ஒருசில நடிகர்களுடன் தான் எந்த இடையூறும் இன்றி சவுகரியமாக நடிக்க முடியும். சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுடன் நான் அதை உணர்ந்திருக்கிறேன். இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக இருந்தது.

    ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது எனக்கு கிடைக்கும் என்று இங்கே பேசியவர்கள் கூறினார்கள். அத்தனை பேருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருமணத்துக்கு பின் நான் நடித்து வெளிவந்த படங்களில் முக்கியமான படமாக ‘36 வயதினிலே’ இருந்தது. ‘காற்றின் மொழி’ அதையும் தாண்டும். இவ்வாறு ஜோதிகா கூறினார். #KaatrinMozhi #Jyothika

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #KaatrinMozhi #Jyothika
    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `காற்றின் மொழி'. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    `ஒவ்வொரு வாரமும் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆயுத பூஜை நாளிலும் படங்கள் வரிசைக் கட்டியிருப்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகிறது. அதனை தவிர்க்க படத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்கு பிறகு படம் ரிலீசாகும். படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

    விதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு, நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காஷிஃப் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளனர். #KaatrinMozhi #Jyothika

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் காற்றின் மொழி படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் பாடல் ஒன்று வரவேற்பை பெற்று வருகிறது. #KaatrinMozhi #Jyotika
    ‘ஜோதிகாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் மொழி. வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளியாக நடிப்பில் புதிய பரிணாமத்தை வழங்கி இருப்பார். இந்த படத்தை இயக்கியவர் ராதாமோகன்.

    தற்போது அதே கூட்டணி மீண்டும் காற்றின் மொழி படத்தின் வாயிலாக இணைந்திருக்கிறது. இந்தி முன்னணி நடிகையான வித்யா பாலன் நடித்த ‘தும்ஹாரி சூளு’வின் தமிழ் ரீமேக்கான இதில் வித்யா பாலன் நடித்திருந்த ரேடியோ தொகுப்பாளர் வேடத்தில் நடிக்கிறார் ஜோதிகா.

    ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கும் இதற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.



    இதன் பர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளியாகிக் கவனம் பெற்றுவரும் நிலையில், தற்போது இதிலிருந்து ஒரு பாடலின், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. ஜோதிகா கதாபாத்திரத்தை விவரிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடலை நகுல் அபயங்கார் பாடியுள்ளார். மதன் கார்க்கி எழுதியுள்ளார். கிளம்பிட்டாளே விஜயலெட்சுமி எனத் தொடங்கும் இந்தப் பாடல் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. #KaatrinMozhi #Jyotika

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #KaatrinMozhi
    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `காற்றின் மொழி'. இந்த படத்தில் நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    இந்நிலையில், இப்படத்தின் டீசரை செப்டம்பர் 20ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார். 

    பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் ஆயுத பூஜையை ஒட்டி வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #KaatrinMozhi #STR #Jyothika
    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சிம்பு, டப்பிங் பணிகளை முடித்துள்ளார். #KaatrinMozhi #STR #Jyothika
    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `காற்றின் மொழி'. இந்த படத்தில் நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சிம்பு தனது காட்சிகளுக்காக நேற்று டப்பிங் பேசி முடித்தார். 

    இந்த படத்தில் ரேடியோ ஷோ ஒன்றில் ஜோதிகாவுடன், திரைப்பட நட்சத்திரமாக சிம்பு தோன்றுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி. அவர் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சிம்பு நடித்துக் கொடுத்தார். டப்பிங் பேசி முடித்த சிம்பு தன்னுடைய காட்சி சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்ததாக படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறினார்.



    பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படம் ஆயுத பூஜையை ஒட்டி வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #KaatrinMozhi #STR #Jyothika

    ஜோதிகாவிற்கு கணவராக காற்றின் மொழி படத்தில் நடித்திருக்கும் வித்தார்த், இந்த படம் எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார். #KaatrinMozhi #Vidaarth
    36 வயதினிலே, மகளீர் மட்டும், நாச்சியார் படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்த ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்சியில் 'துமாரி சுலு' என்ற சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான "காற்றின் மொழி "படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது. மொழி படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குனர் ராதா மோகன் மற்றும் ஜோதிகா கூட்டணி காற்றின் மொழி-யில் மீண்டும் இணைந்து களமிறங்கியுள்ளனர். அதுவே இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் விதார்த் ஜோதிகாவின் கணவனாக நடிக்கிறார்.

    மொழியில் ஊமையாக கண்களாலும் செய்கையாலும் நடித்து அசத்திய ஜோதிகா "காற்றின் மொழி"யில் அதற்கு நேர் மாறான வாயாடி ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து புதிதாக சில கதாபாத்திரங்களையும் சேர்த்து புதுமையான பல விஷயங்களோடு இப்படத்தை இயக்கியுள்ளார் ராதா மோகன். பெண்ணை மையப்படுத்திய படம் என்றாலும், அனைத்து தரப்பினரையும் கவரும் விதமான ஜாலியாக குடும்பத்துடன் மனம் விட்டு சிரித்து மகிழக்கூடிய படமாக இருக்கும் காற்றின் மொழி என்றார் ராதா மோகன். 

    விதார்த் கூறுகையில், ‘ஜோதிகாவின் கணவராக நான் இதில் நடிக்கிறேன். கணவன் மனைவிக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை. இது மாதிரியான கதாபாத்திரத்தில் இதுவரை நான் நடித்ததில்லை. அழகான, அன்பான கணவராக நடித்துள்ளேன். விதார்த் நல்ல நடிகன் என்று இந்த குடும்பப்பாங்கான கதை எனக்கு மீண்டும் ஒரு அடயாளத்தை கண்டிப்பாக கொடுக்கும்’ என்றார்.



    லட்சுமி மஞ்சு மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமாக நடிக்க, சிம்பு சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார். மேலும் குமாரவேல், பாஸ்கர், மனோபாலா, மோகன் ராமன், உமா பத்மநாபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் காற்றின் மொழி படத்தில் குடும்ப பெண்களுக்கான 10 கட்டளைகள் உருவாக்கியிருந்தது பிடித்திருப்பதாக ஜோதிகா கூறியுள்ளார். #KaatrinMozhi #Jyothika
    ஜோதிகா திருமணத்துக்கு பின் நடிக்காமல் இருந்தார். 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தவர் தனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது காற்றின் மொழி என்ற படத்தில் ராதா மோகன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

    இதுபற்றி ஜோதிகா கூறும்போது ‘இது எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது. அதனால் தான் நானே இப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறேன். பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தபடி வாழ வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது.



    அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் ஆதரவு தர வேண்டும். இத்தகைய பெண்களின் மேம்பாட்டிற்கு வழி காட்டும் 10 கட்டளைகளை உள்ளடக்கிய ஒரு போஸ்டர் டிசைன் காற்றின் மொழி படத்திற்கு உருவாக்கியது எனக்கு பிடித்து இருந்தது’ என்றார். #KaatrinMozhi #Jyothika

    பல வெற்றி படங்களை தயாரித்த கலைப்புலி தாணு, என் கலையின் தாகத்தை 60 வயது மாநிறம் திரைப்படம் தீர்த்துள்ளது என்று கூறியிருக்கிறார். #60VayadhuMaaniram
    பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் கலைப்புலி தாணு. இவர் தனது வி.கிரியேஷன்ஸ் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    தற்போது ‘60 வயது மாநிறம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை ராதா மோகன் இயக்குகிறார். இதில் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, விக்ரம் பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள் ஜோதி, பரத் ரெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். 

    தந்தை மகனுக்குமான இடையேயான உறவை சொல்லும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். சத்தமே இல்லாமல் உருவான இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.



    இந்நிலையில், இப்படம் பற்றி தாணு கூறும்போது, ‘கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு, என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக ‘60 வயது மாநிறம்’ அமைய பெற்றுள்ளது. எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது’ என்று கூறியிருக்கிறார்.
    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி வரும் `காற்றின் மொழி' படத்தில் `ஜிமிக்கி கம்மல்' பாடல் இடம்பெறுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #KaatrinMozhi #Jyothika
    கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற `ஜிமிக்கி கம்மல்' என்ற மலையாள பாடல் தமிழ்நாட்டிலும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடல் ஜோதிகா நடிக்கும் `காற்றின் மொழி' படத்திலும் இடம்பெற இருக்கிறது. 

    சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.

    இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் ஜி. தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். நாயகி ஜோதிகா மற்றும் படக்குழுவினர் இப்படத்தை வேகமாகவும், சிறப்பாகவும் முடித்து தந்துள்ளனர்.



    விதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு, நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காஷிஃப் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாக இரு்பபதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜோதிகா பிறந்தநாளான அக்டோபர் 18-ஆம் தேதி படம் ரிலீசாகிறது. #KaatrinMozhi #Jyothika #JimikkiKammal

    ×